4 மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

4 மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12  நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  4 மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு  செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களை குறைப்பது குறித்து முதன்மை நீதிபதிகள் முடிவு செய்யலாம் என்றும், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்ட நீதிமன்றங்கள் தற்போதைய விதிமுறைகளின்படி செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan