எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம்: 2 நிமிடம் மவுன அஞ்சலிக்குப்பின் மோடி பேச்சு

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம்: 2 நிமிடம் மவுன அஞ்சலிக்குப்பின் மோடி பேச்சு

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும் லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan