ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட பகுதியிலும் படைகளை குவிப்போம் – மிரட்டும் வடகொரியா

ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட பகுதியிலும் படைகளை குவிப்போம் – மிரட்டும் வடகொரியா

டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர பகுதியில் படைகளை குவிப்போம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளதால் கொரிய தீபற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் வடக்கு மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், இந்த பிரச்சனைக்கும் வெகு ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது.

தற்போது வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி யோ ஜோங் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள தொடங்கியுள்ளார். இவர் தனது அண்ணனை விட மிகவும் ஆக்ரோஷமான முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில், தென்கொரிய எல்லையில் இருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிரான எழுத்துக்களுடன் பலூன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பறக்கவிடப்பட்டன. 

உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. இதில் உச்சபட்சமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்ப்படுத்த 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் கட்டப்பட்ட கொரிய தகவல் தொடர்பு கட்டிடம் வடகொரிய அரசு நேற்று வெடிகுண்டு தகர்த்தது. 

கட்டிடம் தகர்க்கப்பட்ட வீடியோவையும் வடகொரியா தனது அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டது. இதனால், வட மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் ஏற்பட்ட்டுள்ளது. 

அந்த கட்டிடம் அமைந்திருந்த பகுதி டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர இடமாகும். அப்பகுதியில் முன்னதாக இரு நாடுகளை சேர்ந்தவர்களும் பணி செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை விடுத்தது. மேலும், தங்கள் நாட்டு தூதர்களை அனுப்பவும் விருப்பம் தெரிவித்தது. ஆனால், தென்கொரியாவின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்தது.

இந்நிலையில், எல்லையில் உள்ள ஹேசாங் நகரின் டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர பகுதிகளில் படைகளை குவிக்கப்போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு ராணுவ சோதனைச்சாவடிகளை அமைக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.

ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட பகுதி

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்தையும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் தென்கொரியா தன் பங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு கொரிய நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி  டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர பகுதியில் ஒரு நாடு மட்டும் 

தன்னிச்சையாக படைகளை குவிக்கக்கூடாது.

டி மிலிட்டரைஸ்டு சோனில் படைகளை குவிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளதால் தற்போது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan