அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் டிரம்ப் – ஜான் போல்டன் விளாசல்

அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் டிரம்ப் – ஜான் போல்டன் விளாசல்

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ’அது நடந்த அறை – ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். 

அந்த புத்தகம் அடுத்த வாரம் (ஜூன் 23) அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய  பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தனது புதிய புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜான் போல்டன் பங்கேற்றார். அப்போது அவரிடம் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் தானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த போல்டன், ‘அவர் (டிரம்ப்) அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் என்று நான் நினைக்கவில்லை. அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இருக்கும் எனவும் நான் கருதவில்லை’

டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாக எவை மறு தேர்தலுக்கு என்ன நல்லது என்பதை தவிர வேறு எந்த வழிகாட்டு கொள்கைகளையும் தவிர அங்கு வேறு எந்த கொள்கைகளையும் அங்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. டிரம்ப் தான் மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருக்கிறார். 

என அவர் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan