துணைநிலை ஆளுநரின் உத்தரவு டெல்லியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்: மாநில அரசு

துணைநிலை ஆளுநரின் உத்தரவு டெல்லியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்: மாநில அரசு

டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் இன்ஸ்டிடியூசனல் கோரன்டைனில் இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள டெல்லி அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், வீட்டு கோரன்டைனை நிறுத்த வேண்டும். மேலும், இன்ஸ்டிடியூசனல் கோரன்டைனில் ஐந்து நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் ‘‘துணைநிலை ஆளுநரின் வீட்டு கோரன்டைன் குறித்த கருத்து தன்னிச்சையானது. இது மிகப்பெரிய அளவில் பாதிக்கும்’’ என்று டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan