கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 23 ஆயிரத்து 500 பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 23 ஆயிரத்து 500 பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 23 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 271 அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

அரியலூர் – 23

செங்கல்பட்டு – 1,635

சென்னை – 16,699

கோவை – 81

கடலூர் – 169

தர்மபுரி – 13

திண்டுக்கல் – 70

ஈரோடு – 6

கள்ளக்குறிச்சி – 80

காஞ்சிபுரம் – 477

கன்னியாகுமரி – 59

கரூர் – 24

கிருஷ்ணகிரி – 25 

மதுரை – 198

நாகை – 130

நாமக்கல் – 9

நீலகிரி – 16

பெரம்பலூர் – 3

புதுக்கோட்டை – 30

ராமநாதபுரம் – 142

ராணிப்பேட்டை – 285

சேலம் – 80

சிவகங்கை – 30

தென்காசி – 112

தஞ்சாவூர் – 94

தேனி – 60

திருப்பத்தூர் – 17

திருவள்ளூர் – 1,128

திருவண்ணாமலை – 408

திருவாரூர் – 111

தூத்துக்குடி – 179

திருநெல்வேலி – 181

திருப்பூர் – 4

திருச்சி – 64

வேலூர் – 270

விழுப்புரம் – 137

விருதுநகர் – 46

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 138

உள்நாடு – 84

ரெயில் நிலைய கண்காணிப்பு – 192

மொத்தம் – 23,509

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan