மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரள மாநிலங்களின் கொரோனா அப்டேட்ஸ்…

மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரள மாநிலங்களின் கொரோனா அப்டேட்ஸ்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 2909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

தமிழ்நாடு, டெல்லியில் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில் மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,35,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி

டெல்லியில் 2,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 62,655 ஆக  உயர்ந்துள்ளது.

கர்நாடகா

கர்நாடகாவில் இன்று 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 9,399 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா

கேரளாவில் இன்று 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 3310 ஆக அதிகரித்தள்ளது. 88 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை 1540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan