மிசோரம், நாகாலாந்தில் மிதமான நிலநடுக்கம் – மக்கள் அதிர்ச்சி

மிசோரம், நாகாலாந்தில் மிதமான நிலநடுக்கம் – மக்கள் அதிர்ச்சி

மிசோரம் மற்றும் நாகாலாந்தில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஐசால்:

மிசோரம் மாநிலத்தின் சம்பாய் அருகே இன்று அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பாயில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 21 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகாக பதிவாகியிருந்தது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல், நாகாலாந்திலும் இன்று அதிகாலை 3.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவில்

பதிவானது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

ஏற்கனவே, மிசோரம் மாநிலத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan