தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு- விக்கிரம‌ராஜா

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு- விக்கிரம‌ராஜா

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும். வரும் 30 ஆம் தேதி அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு விக்கிரம‌ராஜா கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan