தெலுங்கானாவில் ஒரே நாளில் 920 பேருக்கு கொரோனா – 11 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

தெலுங்கானாவில் ஒரே நாளில் 920 பேருக்கு கொரோனா – 11 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஐதராபாத்:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.   

இந்நிலையில், தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தெலுங்கானாவில் நேற்று 920 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,688 ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan