இன்றும் விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் ரூ.83.37

இன்றும் விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் ரூ.83.37

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை:

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுகிறது. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.80.13 ஆகவும், டீசல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.80.19 ஆகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan