உள்நாட்டு விமான சேவை: 45 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி

உள்நாட்டு விமான சேவை: 45 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி

உள்நாட்டு விமானங்களில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 23-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை, சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டன. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் கூடுதலான விமானங்கள் சேவை தேவையிருந்தது. மேலும், விமான போக்குவரத்து தடங்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூன்றில் ஒரு பங்கு என்பதை 45 சதவீதமாக உயர்த்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

‘‘கடந்த 25-ந்தேதியில் இரந்து 21,316 விமானங்கள் மூலம் 18,92,581 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ஒரு மாதம் போக்குவரத்து தடம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இதனால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan