உலக அளவில் கொரோனாவில் இருந்து 53 லட்சம் பேர் குணமடைந்தனர்

உலக அளவில் கொரோனாவில் இருந்து 53 லட்சம் பேர் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 214 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.94 லட்சத்தைக் கடந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan