அசாமில் அடைமழை (கனமழை) – முன்னாள் தலைமை நீதிபதி வீட்டை சூழ்ந்த வெள்ளம்

அசாமில் அடைமழை (கனமழை) – முன்னாள் தலைமை நீதிபதி வீட்டை சூழ்ந்த வெள்ளம்

அசாமில் பெய்து வரும் கனமழை எதிரொலியால், முன்னாள் தலைமை நீதிபதி வீட்டில் வெள்ள நீர் சூழ்ந்தது.

கவுகாத்தி:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தில்பர்கா மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக, மாவட்ட துணை கலெக்டர் பல்லவ் கோபால் ஜா கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். இதற்கென 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  

தில்பர்கா மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசித்த அவரது தாயார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan