இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 20-ம் தேதி 14,516 பேருக்கும், 21-ம் தேதி 15,413 பேருக்கும், 22-ம் தேதி 14,821 பேருக்கும், 23-ம் தேதி 14,933 பேருக்கும், 24-ம் தேதி 15,968 பேருக்கும் 25-ம் தேதி 16,922 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. 

இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. நேற்றைய இரவு நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. 

தற்போதைய நிலவரப்படி, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan