தமிழகத்தில் இன்று புதிதாக 3713 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 3713 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோன வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின் படி மாநிலத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 68 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இன்று 34 ஆயிரத்து 805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 32 ஆயிரத்து 68 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan