கம்போடியாவில் 478 கிலோ போதைப் பொருள் தீவைத்து எரிப்பு

கம்போடியாவில் 478 கிலோ போதைப் பொருள் தீவைத்து எரிப்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கம்போடியா நாட்டில் நேற்று 478 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

புனோம்பென்:

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கம்போடியா நாட்டில் நேற்று 478 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இது குறித்து அந்நாட்டின் துணை பிரதமரும் போதைப் பொருட்களை எதிர்ப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவருமான கே கிம் யான் கூறுகையில் ” சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் போதைப் பொருட்களை அழிப்பது குற்றவாளிகளுக்கு கம்போடியா அரசு விடுக்கும் ஒரு செய்தியாகும். போதைப்பொருள் விவகாரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். போதைப் பொருட்களை வெறுமனே கைப்பற்றுவதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம். கம்போடியாவில் போதைப்பொருள் கட்டமைப்பு தகர்த்தெறியப்படும்” எனக் கூறினார்.

திரிக்கப்பட்ட 478 கிலோ போதைப்பொருள் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்டது என்றும் இது தொடர்பாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கே கிம் யான் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan