உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் – பிரதமர் மோடி

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் – பிரதமர் மோடி

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவ திட்டமான ஆயுஷ்மான் பாரத் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு. பொது முடக்கம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விழுக்காடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan