கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை- முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை- முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை தந்தார் என்ற முதலமைச்சரின் கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கூறியுள்ளதாவது:-

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். நான் சொன்ன ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளேன். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் சொன்னேன். இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருக்கிறார். கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கொரோனா சமூக பரவலாக இல்லை என்ற வார்த்தை விளையாட்டாக மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார் முதல்வர். தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan