உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக ம.பி. ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார்: ஜனாதிபதி மாளிகை

உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக ம.பி. ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார்: ஜனாதிபதி மாளிகை

உத்தர பிரதேச மாநில ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக ம.பி. ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் லால் ஜி டாண்டன். 85 வயதாகும் இவர் கடந்த 11-ந்தேதியில் இருந்து தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநில ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை (ராஷ்டிரபதி பவன்) வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘லால் ஜி டாண்டன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மத்திய பிரதேச மாநில ஆளுநரின் செயல்பாடுகளை கவனிக்க, உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் சொந்த வேலையுடன் கூடுதலாக கவனிக்க நியமிக்கப்படுவதில் இந்திய ஜனாதிபதி மகிழ்ச்சி அடைகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan