மகாராஷ்டிராவில் மேலும் 150 காவல் துறையினருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் மேலும் 150 காவல் துறையினருக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 150 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை:

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் அந்த வைரசின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தை புரட்டிப் போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.

ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 150 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்த போலீசார் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியான போலீசார் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan