ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan