மகாராஷ்டிராவில் மேலும் 4,878 பேருக்கு புதிதாக கொரோனா

மகாராஷ்டிராவில் மேலும் 4,878 பேருக்கு புதிதாக கொரோனா

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை: 

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. 

நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில்,  மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 878 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 75 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 1,951 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 245 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 95 உயிரிழப்புகள் கடந்த 48 மணி நேரத்தில் நிகழ்ந்தவையாகும். எஞ்சிய 150 உயிரிழப்புகள் அதற்கு முன்னதாக ஏற்பட்டு தற்போது மாநில பட்டியலில் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan