சென்னை காவல் ஆணையர் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் எ.கே. விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே. விஸ்வநாதன் தமிழக செயாலகம் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், அவருக்கு பதிலாக மகேஷ் அகர்வால் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா மதுரை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   

திருச்சி மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan