என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

நெய்வேலி:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆலையின் பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் 2 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேபோல் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan