சத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்

சத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த, தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.

#சத்தியமா_விடவே_கூடாது

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Source: Maalaimalar

Author Image
murugan