என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் உத்தரவு

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் உத்தரவு

என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொதிகலன் வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உததரவிடப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது என்றும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan