சேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்

சேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 15-ம் தேதி கிருஷ்ணகிரி, ஜூலை 16 சேலம், ஜூலை 17 ஈரோடு ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.63 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோட்டில் ரூ.13 கோடியில் புதிதாக வீட்டுவசதி வாரிய அலுவலகங்கள், வணிக வளாகம் கட்டுவதற்கும் சம்பத் நகரில் ரூ.2.60 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து, ஈரோடு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனை மையத்தையும் திறந்துவைக்க உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan