விசாகப்பட்டினம் மருந்து நிறுவனம்யில் திடீர் தீ விபத்து

விசாகப்பட்டினம் மருந்து நிறுவனம்யில் திடீர் தீ விபத்து

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அமராவதி:

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட வெடிச்சப்தங்கள் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. அப்பகுதியில் சுற்றி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அவை வெகு நேரம் போராடி தீயை அணைத்து வருகின்றன.

இந்த தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மருந்து கம்பெனியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.

ஏற்கனவே, விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி 11 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan