முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இதில், தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan