ராஜஸ்தான் அரசியல் : பாஜக நாளை திடீர் ஆலோசனை

ராஜஸ்தான் அரசியல் : பாஜக நாளை திடீர் ஆலோசனை

நொடிக்கு நொடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அம்மாநில பாஜக நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்து வந்த  சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

சச்சின் பைலட் தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்தார். 

ஆனால் எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்தது.

இதற்கிடையே நேற்றும், இன்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள வேண்டும் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறாரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால், இந்த கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, ராஜஸ்தான் மாநில துணைமுதல் மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய இரு பதவிகளில் இருந்தும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்சபட்ட பரபரப்பு நிலவி வருகிறது

இந்நிலையில், ராஜஸ்தானின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எதிர்க்கட்சியான பாஜக நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களான வசுந்தரா ராஜே 

உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசில் இருந்து பைலட் நீக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan