Press "Enter" to skip to content

செப்.7க்குப்பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப். 7க்குப்பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப். 7க்குப்பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை:

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இதுபற்றி கூறுகையில்,  குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. செப்டம்பர் 7ந்தேதிக்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயராக உள்ளதாகவும் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar