Press "Enter" to skip to content

கோவையில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கோவையில் நாளை முதல் வரும் 27ந்தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவையில் நாளை முதல் வரும் 27ந்தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar