Press "Enter" to skip to content

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: எல்கே அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்ட நீதிபதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான எல்.கே. அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் அத்வானி ஆஜரானார். அப்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து காணொலி காட்சி வாயிலாக வாக்குமூலத்தை அத்வானி பதிவு செய்தார்.

அத்வானியிடம் நீதிபதி எஸ்.கே. யாதவ் வாக்குமூலம் பெற்று பதி்வு செய்தார். நேற்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அத்வானி ஆஜரானார். மதியம் 3.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் தொடர்ந்து 100 கேள்விகள் கேட்டுகப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு எதிரான அனைத்துக் குற்ச்சாட்டுக்களையும் அத்வானி மறுத்துள்ளார். இதை அவரது வக்கீல் தெரிவித்தார்.

சிபிஐ நீதிமன்றம் தினந்தோறும் வழக்கை விசாரணையை நடத்தி ஆகஸ்ட் 31-ந்தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.

அத்வானி விசாரணைக்கு ஆஜராகும் நிலையில் கடந்த புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar