பொம்மை துப்பாக்கியால் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் கைது

பொம்மை துப்பாக்கியால் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் கைது

ஜம்மு-காஷ்மீரில் பொம்மை துப்பாக்கியால் மிரட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டம் யாரிபோரா என்ற இடத்தில் வங்கி ஒன்று உள்ளது. நேற்றிரவு திடீரென ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து காவலாளிகளை மிரட்டியுள்ளான். உடனே அவர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவலாளி நெற்றியில் துப்பாக்கியை வைத்த அந்த நபர், வங்கியின் கதவை திறந்துவிட கேட்டுள்ளான். அப்போது சுதாரித்துக் கொண்ட காவலாளிகள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்துள்ளனர்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் அவர்களிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். அப்போது போலீசார் பரிசோதித்ததில் அது பொம்பை துப்பாக்கி என்று தெரியவந்தது. அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தைரியத்துன் செயல்பட்டு கொள்ளையடிக்க வந்த நபரை பிடித்த காவலாளிகளுக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan