தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சென்னை:

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என கூறி உள்ளது.

விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலான வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan