கர்நாடகாவில் கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

கர்நாடகாவில் கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து, கொத்ததாக செத்து மடிகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்களையே கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது. அதேபோல் அதிக வயதுடையவர்களே பெரும்பாலும் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹுவின ஹடகளியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஹல்லம்மா. இவர் வங்கியில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு கடந்த ஜூலை 16-ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹல்லம்மா கூறுகையில், மருத்துவர்கள் தனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். வழக்கமான உணவுடன் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தேன் என தெரிவித்தார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி முழுமையாக குணமடைந்தது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan