புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதாக தகவல்: கிரண் பெடி மறுப்பு

புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதாக தகவல்: கிரண் பெடி மறுப்பு

புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக வந்த செய்தி உறுதிப்படுத்தப்படாதது என்று கிரண் பெடி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார். கவர்னராக கிரண் பெடி உள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண் பெடிக்கு அதிகாரம் அதிகம். இதை பயன்படுத்தி நாராயண சாமியுடன் மோதல் போக்கை கொண்டுள்ளார். இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உச்சக்கட்டமாக சட்டசபை ஆளுநர் இல்லாமல் கூட்டப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரி மாநில ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி உலா வருகிறது. இதை கிரண் பெடி மறுத்துள்ளார்.

இதுகுறித்து கிரண் பெடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என் அருமை நண்பர்களுக்கு, இதுகுறித்து தகவல்கள் எனக்கு அதிகப்படியாக வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டாம் அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்தியை பரப்ப வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

My dear friends. I have received upteen messages on this news.
I have no idea about this.
🙏 Please do not forward or spread unconfirmed news. pic.twitter.com/QYT1zhh9p0

— Kiran Bedi (@thekiranbedi)

July 26, 2020

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan