ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மோர்டார்கள் மூலம் சிறிய ரக ஆயுதங்களால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தொடர்ந்து 6-வது நாளாக எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan