ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan