வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கொரோனா – வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கொரோனா – வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி:

ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தனது வீட்டு உரிமையாளர் உள்பட அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு வந்துள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா தொற்று பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

தொற்று பாதித்த நபர் செல்ஃபி வீடியோ மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளனர்.

வாடகைக்கு குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan