புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்று உறுதியான பாலன் (67) புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan