பீகாரில் பெய்து வரும் அடைமழை (கனமழை) – 29 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் பெய்து வரும் அடைமழை (கனமழை) – 29 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் வெள்ளம் காரணமாக 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

பாட்னா:

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைப் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், பீகாரில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 12 ஆயிரத்து 800 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan