ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan