மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் உச்சத்தில் உள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசு ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

அதில், ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan