பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி – தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி – தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலியாகினர்.

பாட்னா:

பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் தலா 3 பேர் ஷேக்புரா மற்றும் ஜமுய் பகுதிகள், தலா ஒருவர் சிவான் மற்றும் பெகுசராய் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan