இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 6  லட்சத்தும் மேற்பட்ட சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொற்றுநோயை திறம்பட சமாளிப்பதற்கு விரிவான சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடைமுறையை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்துகிறது. தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 10 லட்சம் என்ற அளவிற்கு உயர்த்துவதே நோக்கம் என்றும் கூறி உள்ளது.

விரைவு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan