பத்ரிநாத் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு- காணொளி

பத்ரிநாத் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு- காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பத்ரிநாத்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் நிலச்சரிவில்  சிக்கி புதைந்தன. சாலைகள், சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

#WATCH Uttarakhand: A landslide occurred at Badrinath national highway in Bajpur of Chamoli district yesterday, following incessant rainfall. Operations to clear the highway is underway. pic.twitter.com/F2RpOLvTH8

— ANI (@ANI)

July 31, 2020

தொடர் மழை காரணமாக, சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பாஜ்பூர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan