கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் ஆரம்பத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தனியார்  ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

அதன்பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. இந்த  கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில்  லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சில ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து  அந்த ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu)

August 2, 2020

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan