ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு பெருமைப்படுகிறேன் – பிரியங்கா பெருமிதம்

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு பெருமைப்படுகிறேன் – பிரியங்கா பெருமிதம்

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள ‘ரக்‌ஷா பந்தன்’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். அவரைப் போன்றவர் சகோதரராக கிடைத்தது, நான் பெற்ற அதிர்ஷ்டம்.

எல்லா நல்லது, கெட்டதுகளிலும் ராகுல்காந்தியுடன் நான் இருந்துள்ளேன். உண்மை, பொறுமையுடன் வாழ்க்கையை வாழும் கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan